தமிழ்தேசிய ஆதரவாளர் அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் காலமானார்.


தமிழீழ விடுதலைப் போராடத்தையும் நேசித்தவரும், சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தமிழீழ அரசை நிறுவுவதற்குமான போராட்டத்தில் தீவிர ஆதரவாளராக இருந்த வருமான அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் 93 ஆவது வயதில் கடந்த 09ஆம் திகதி தனது இல்லத்தில் காலமானார்.


1967 முதல் 1969 வரை அமெரிக்காவின் சட்டமா அதிபராக பணியாற்றியிருந்தார். ஈழத்தில் நடைபெற்ற இனஅழிப்பிற்கு நீதி கோரியும், சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், நாடுகடந்த அரசாங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த மில்லியன் கையெழுத்து வேட்டை என்ற போராட்டத்தில் முதலில் கையொப்பமிட்டிருந்தார். மேலும் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதில் முன்னணி ஆலோசகராக பணியாற்றியிருந்ததோடு ,தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களினது 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தி மலரில் தனது கருத்துக்களை பதிவிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.9 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: