கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரணைத்தீவில் 165 குடும்பங்கள் மீள்குறியேறி வாழ்ந்துவருகின்ற நிலையில், கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதால் இப்பகுதியில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் பல நாட்டில் உள்ள போதிலும், கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய இரணைத்தீவை தேர்ந்தெடுத்தமைக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவும் பிரதேச மக்கள் எண்ணியுள்ளனர்.
இதேவேளை இரணைதீவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட முடிவின்மூலம் அரசாங்கம் இனங்களுக்கிடையில் திட்டமிட்டு பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சி செய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளபோதிலும் இவ்வாறான இடத்தை தெரிவு செய்துள்ளமையானது அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கையை காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்குறிப்பிட்டுள்ளார்.