நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு - பொலிஸார் எச்சரிக்கை.

யாழ்ப்பாணத்தில் கொள்ளை கும்பலால் வயோதிபர் கொலை.

நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்றைய தினத்தில் (11) மாத்திரம் தங்கச்சங்கிலிகள் கொள்ளையிடப்பட்ட 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நீர்கொழும்பு, ராகம, அவிசாவளை, திஸ்ஸமகாராம மற்றும் ஜாஎல ஆகிய பகுதிகளில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவர்களாலேயே தங்கச்சங்கிலிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.


புத்தாண்டு காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் போதும் வீதிகளில் பயணிக்கும் போதும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.


இதேவேளை யாழ்ப்பாணம்- தென்மராட்சி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல், வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கியதில் வயோதிபர் சிவராசா (வயது72) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது,இதன்போது நகை மற்றும் பணம் ஆகியவற்றினை எங்கு வைத்துள்ளீர்கள் என கேட்டு, வயோதிபரின் கழுத்தை அவர்கள் நெரித்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.


அதனைத் தொடர்ந்து நகைகள் மற்றும் ஒன்றரை இலட்சம் பணத்தை கொள்ளையிட்டுக்கொண்டு குறித்த குழு, தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.56 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: