பருத்தித்துறை சாரையடி சிறுமியின் மரணம்! சிறுமியின் பெரியதாய் வாக்குமூலம்.
புகைப்படம் வீடியோ இணைப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சாரையடியைச் சேர்ந்த 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஹம்சி சிறி தரன் எனும் 9 வயது சிறுமி, யன்னல் கதவின் பிணைச்சலில் அவருடைய சகோதரனின் கழுத்துப்பட்டியை விளையாட்டாக கட்டி விளையாடிய போதே தவறுதலாக கழுத்து சுருக்கிடப்பட்டு மரணித்ததாக கூறப்படுகின்றது. தந்தையார் தொழில் நிமித்தம் வேலைக்குச் செனறிருந்த வேளையிலும், சகோதரனின் சுகயீனம் காரணமாக தாயார் அவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றிருந்த வேளையில் தனித்திருந்த சிறுமி ஹம்சி விளையாட்டாக சுருக்கிடப்பட்டு காலை 11.30 மணியளவில் மரணித்துள்ளதாக விசாரணைகளைத் தொடர்ந்த உடற்கூற்று பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிறமியின் மரணம் தொடர்பாக சந்தேகங்கள் எழுந்திருந்த நிலையில் திடீர் இறப்பு அதிகாரி சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனை பருத்தித்துறை ஆதாரவைத்தியாசலையில் சட்ட மருத்துவ அதிகாரி கனகசாபாபதி சுதேவாவினால்> கழுத்தப்பட்டி இறுக்கபட்டு மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கபட்டுள்ளது. சிறுவர்கள் தனித்து விடப்படும் போது விளையாடும் விபரீதமான விளையாட்டுகள் மரணத்தை சம்பிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது