நாளை யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு.

குரு முதல்வர் ஜெப ரட்ணம் அடிகளார்.


ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு நாளை யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஜெப ரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.


2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் தென் பகுதியில் பல இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு தாக்குதலில் மரணமடைந்த, பாதிப்படைந்த மக்களுக்கான இரண்டாவது ஆண்டு நிகழ்வு நாளை புதன்கிழமை 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலம், கட்டுவப்பிட்டி செபஸ்தியார் தேவாலயம் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் உல்லாச விடுதிகள் இடம்பெற்ற குண்டு வெடிப்பிலே நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள்;பலர் அங்கவீனமானார்கள் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. குண்டு தாக்குதலில் மரணமடைந்த, பாதிப்படைந்த மக்களுக்கான யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் நாளை காலை 8.45 மணி அளவில் விசேட ஆராதனை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டள்ளது.


இதேவேளை ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல, கடந்த யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் 30 ஆண்டுகளாக அனுபவித்த போரின் பொழுது இறந்து போன ஆயிரக்கணக்கான மக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசு அனுமதி வழங்கி பாதுகாப்பு தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அது தமிழ் மக்கள் செய்ய வேண்டிய ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக இருக்கிறது என்பதையும் தெரிவித்து இதனை இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனை எடுத்து அனுமதிகளை விரைவில் வழங்க வேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

25 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: