2வது டெஸ்டில் கருணரத்னே, திரிமானே சதம் - இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 469/6


வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் சமநிலையில் முடிந்தது.


இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று முன்தினம் தொடங்கியது.

நாணய சுழற்யில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கருணரத்னே, லஹிரு திரிமானே ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.


அணியின் ஸ்கோர் 209 ஓட்டங்களாக உயர்ந்த போது 12-வது சதத்தை அடித்து இருந்த கருணரத்னே . ஆட்டமிழந்தார் .திரிமன்னே 212 பந்துகளில் தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்தார்.


முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 291 ஓட்டங்கள் குவித்துள்ளது.

திரிமானே 131 ஓட்டங்களுடனும் , ஒஷாடா பெர்னாண்டோ 40 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.


இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சிறப்பாக ஆடிய திரிமானே 140 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் . அரை சதமடித்து அசத்திய ஒஷாடா பெர்னாண்டோ 81 ஓட்டங்களில் வெளியேறினார்.


அடுத்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 5 ஓட்டங்களிலும், தனஞ்செய டி சில்வா 2 ஓட்டங்களிலும் , பதும் நிசங்கா 30 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 469 ஓட்டங்கள் குவித்துள்ளது. டிக்வெலா 64 ஓட்டங்கலுடனும், ரமேஷ் மெண்டிஸ் 22 ஓட்டங்கலுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.


வங்காளதேசம் அணி சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், தஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

22 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: