• smithjayanth6

தென்னாபிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.


லாஹூர் மைதானத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஸ்வான் ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களையும் ஹெய்டர் அலி 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இது ரிஸ்வானின் முதல் ரி-20 கிரிக்கெட் சதமாகும்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், பெலுக்வாயோ 2 விக்கெட்டுகளையும் போர்டுயின், சிபம்லா மற்றும் சம்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 170 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஓட்டங்களால் வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரீஸா ஹென்ரிக்ஸ் 54 ஓட்டங்களையும் மாலன் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஹரிஸ் ரவூப் மற்றும் உஸ்மான் காதீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பஹும் அஷ்ரப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 64 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மொஹமட் ரிஸ்வான் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை லாஹூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

1 view
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli