இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை அரசு தலைவர்கள் பேச்சு.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையுடனான தொடர்புகளை விரிவுப்படுத்தல் பற்றியும் இலங்கை இஸ்லாமிய மக்களின் நிலை தொடர்பிலும் இலங்கை ஜனாதிபதியுடன் தாம் கலந்துரையாடியதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் கலாநிதி யூசுப் ஒதய்மீன் குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின்போது இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

மேலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பஹ்ரைன் இளவரசரான சல்மான் பின் ஹமாத் அல் கலீபாவுடன் உரையாடல் ஒன்றை மேற்கொண்டதாகவும், பிரதமர் வௌியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பு நாடு என்பது குறிப்பிடதக்கது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு நாளை இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கான ஆதரவு கோரலான கலந்துரையாடலாக இருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

1 view
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli