October மாத நட்சத்திரமாகிறார்கள் அபினிஷா மற்றும் சஹாஷ்


மெய்வெளி நாடகப் பயிலகத்தின் மாதாந்த பயிற்சியாளர் அளிக்கையில் 2019 இன் October மாதத்திற்கான STAR OF THE MONTH பாராட்டு விருதினை செல்வி அபினிஷா ஜீவகுமார் மற்றும் சஹாஷ் விக்னவிக்னராஜாஅவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மெய்வெளி நாடகப் பயிலகத்தின் October மாதத்திற்கான பயிற்சியாளர் அளிக்கை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை(25 October 2019) Hayes இல் உள்ள Barnhill community high school இல் நடைபெற்றது. பெற்றோர்களும் பிள்ளைகளை உற்சாகமூட்ட வந்திருந்த விருந்தினர்களும்

கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பிரான்ஸ் திருமறைக்கலாமன்றத்தின் ஆரம்பகால மூத்த உறுப்பினரும் தேர்ந்த கலைஞருமாகிய

பெருமதிப்புக்குரிய திரு.பெஞ்சமின் இம்மனுவேல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

தாம் கற்றுக்கொண்ட அரங்க நுட்பங்களையும் தமது உருவாக்கத்தில் தாமே தயார்ப்படுத்திக்கொண்ட விபரண அளிக்கைகளையும் பயிற்சியாளர்கள் இந்த நிகழ்வில் நிகழ்த்திக் காட்டியிருந்தார்கள்.

அரங்க விளையாட்டுக்கள்,உடல் மொழிப் பிரயோக நுட்பங்கள்,பயிற்சி நெறியால் தாம் பெற்றுக்கொண்ட நன்மைகள், தற்போது ஒத்திகைகளில் இருக்கும் இலக்கிய நாடகங்களில் இருந்து சில துணுக்குகள் போன்ற பல சுவாரஸ்யமான அளிக்கைகளோடு அன்றைய நாளை பயிற்சியாளர்கள் சிறப்பித்திருந்தார்கள்.

ஐம்பது பயிற்சியாளர்கள் பயிலும் இந்த நாடகப் பயிலகத்தில் 2019 October மாதத்திற்கான பயிற்சியாளர் நட்சத்திரமாக செல்வி அபினிஷா ஜீவகுமார் மற்றும் சஹாஷ் விக்னவிக்னராஜா போன்றோர் தெரிவுசெய்யப்பட்டு பாராட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பயிற்சிகளின் போது பயிற்சியாளர்களின் ஈடுபாடு, செயற்திறன், ஆர்வம், தற்துணிவு, பேசும் திறன், பாடும் திறன், ஆடும் திறன், தலைமைத்துவம், கூட்டுச் செயலுணர்வு, நன் நடத்தை, பயிற்சிகளுக்கான கிரமமான வரவு போன்ற பல விடயங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தி இந்த நட்சத்திர தெரிவு மாதாந்தம் இடம்பெறும் என்று மெய்வெளி நிர்வாகம் நிகழ்வில் தெரியப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

STAR OF THE MONTH விருது பெறும் செல்வி செல்வி அபினிஷா ஜீவகுமார் மற்றும் சஹாஷ் விக்னவிக்னராஜா இருவருக்கும் மெய்வெளி நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றது.




  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE