- smithjayanth6
பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் தற்கொலை

பிரித்தானியாவின் மோடன் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மனோஜ் ராஜேந்திரம் எனும் இளைஞர் 28 ம் தகதி தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிக்கப்படுகின்றது.
கிங்ஸ்ரன் ரிபின் ஆண்கள் பாடசாலையின் முன்னாள் மாணவனும், லண்டன் இம்பீரியல் கொலிஜ் பட்டதாரியுமான இந்த இளைஞரின இந்த பரிதாப மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானுர்த்தி பொறியியலாளரான இவர் சிறந்த இசைக்கலைஞனாகவும் கீபொட் வாத்திய கலைஞராகவும், ஈடுபாடு கொண்ட இவரின இந்த முடிவு நண்பர்கள் உறவுகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலை மற்றும் சட்டன் தமிழ் பாடசாலையழலும் சுரத்தட்டு ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். முடக்கநிலை தொடர்கின்ற நிலையில் இவரது இந்த பரிதாப முடிவு பல கவலைகளை தமிழ் சமூகததில் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுககின்றது.