கொரோனாவால் மரணித்த முன்னாள் போராளி தமிழன்புவின் இறுதிவணக்க நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.


இலண்டன் லூசியம் பகுதியில் வாழ்ந்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த முன்னாள் போராளியான தமிழன்புவின் இறுதிவணக்க நிகழ்வுகள் இன்று ஹரோ கென்ரன் பகுதியில் அமைந்துள்ள Om Funeral Care Ltd இல் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய கொரோனா நோயத் தொற்று நெருக்கடியில், பிரித்தானிய அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் சட்ட,திட்டங்களுக்கு அமைவாக இறுதி வணக்க நிகழ்வுகளை ஏற்பாட்டாளர்கள் ஒழுங்கசெய்திருந்தனர். தமிழன்பு என்று அழைக்கப்பட்ட பா சுபாசினி கொரோனா தொற்று காரணமான மரணித்துள்ளார் என்றும் பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து குறுகிய கால இடைவெளியில் இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலண்டன் லூசியம் பகுதயில் வசித்து வந்த தமிழன்பு என்று அழைக்கப்பட்ட சுபாசினி ஒரு பிள்ளையின் தாய் என்பதோடு தேச விடுதலைப்போரில் கிளாலிப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் தனது காலை இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாலதிபடையணி மற்றும், கணணிப்பிரிவு முன்னாள் போராளியும், இறுதி யுத்த களமுனையில் முள்ளிவாய்க்கால் வரை பணியாற்றியவருமான தமிழன்புவனி இறுதிக்கிரிகைகள் முன்னாள் சக பெண் போராளிகளால் பொறுப்பேற்கபப்பட்டு உரிய இறுதி வணக்க நிகழ்வுகளுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரின் இறுதி அஞ்சலியிலும், இறுதிகிரிகைகளிலும் முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

438 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE