- smithjayanth6
இலங்கைக்கு மேலும் 850 சுற்றுலா பயணிகள் வந்தடைந்தனர்.
Updated: Feb 15

இலங்கைக்கு கசகஸ்தான் மற்றும் உக்ரைனில் இருந்து சுற்றுலா பயணம் மேற்கொண்டு 850 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
850 சுற்றுலாப் பயணிகள் பத்து விமான சேவைகளில் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய உக்ரைனில் இருந்து 179 சுற்றுலாப் பயணிகளும் கசகஸ்தானில் இருந்து 235 சுற்றுலாப் பயணிகளும் ஏனையவர்கள் வேறு நாடுகளிலும் இருந்தும் வருகை தந்துள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமை படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தால் தனிமை படுத்தல் இடங்களுக்கு அழைத்துச்செல்லப்படுள்ளனர்
10 views