திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் வெகுவிரைவில் இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொள்ளும்

அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு

எரிபொருள் தாங்கியை இலங்கை வசமாக்க தொழிற்சங்கத்தினர், அரசியல் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சு முன்னெடுக்கப்பட்டு ஒரு தீர்வு பொறிமுறை வகுக்கப்பட்டடுள'ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பான பேச்சில் 2017ஆம் ஆண்டு எண்ணெய் தாங்கி குறித்து செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் புறம் தள்ளி புதிய அணுகுமுறையைக் கையாள்வதாக இந்தியத் தூதுவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பிறகு முழுமையாக பயன்பெறாதுபோன திருகோணமலை எரிபொருள் தாங்கி 2003ஆம் ஆண்டு இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. பெறுமதி மிக்க இந்தத் தேசிய வளத்தை வெகுவிரைவில் சொந்தமாக்கிக் கொள்வோம் என அவர் குறிப்பிட்டார். திருகோணமலை கடல் மார்க்கத்தின் ஊடாகச் செல்லும் கப்பல்கள் இந்தியாவுடன் தொடர்புப்பட்டுள்ளதால் ,இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும்,

இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனத்துடன் இணைந்து திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளததோடு இதனூடாக அதிக தேசிய வருவாயை குறுகிய காலத்தில் ஈட்டிக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli