மன வடுக்களை மாற்றாத 16 ஆண்டுகள்

வடமராட்சி கிழக்கு மக்களின் வாழ்வில் மாற்றங்கள் நிகழுமா?


சுனாமி என்னும் கடல் பேரனர்த்தம் இலங்கையில் நிகழ்ந்து 16 ஆண்டுகள் ஓடி மறைந்திருக்கின்ற நிலையில் இன்னமும் அதன் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அவதியுறும் மக்களால் நிறைந்திருக்கிறது வடமராட்சி கிழக்கு.


இலங்கையின் பல பாகங்களிலும் 2004ம் ஆண்டு தாக்கிய சுனாமி ஆழிப் பேரலை பல உயிர்களையும் சொத்துக்களையும் அழித்ததோடு

பல மக்களின் வாழ்வாதாரத்தை கோள்விக்குறியாக்கியிருந்தது. இந்த இயற்கை அனர்த்தத்தில் ஏனைய பிரதேசங்களைக் காட்டிலும்

அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்று வடமராட்சி கிழக்குப் பிரதேசம் ஆகும்.

இன்றுவரை மீளப் புணரமைக்கப்படாத இந்த பிரதேசத்தின் பல பகுதிகள் அனர்த்தத்தின் எச்சங்களாக இப்போதும் அப் பிரதேச மக்களை

அச்சுறுத்தியபடியே இருக்கின்றன என்று பிரதேசாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


கடந்த வார இறுதியில் சுனாமி நினைவு நாளின் 16வது ஆண்டு நினைவினை வடமராட்சி கிழக்கு மக்கள் உணர்வு பூர்வமாக அனுட்டித்திருந்தார்கள்.

உடுத்துறையில் அமைந்திருக்கும் சுனாமி பொது நினைவாலயத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் மக்கள் 16 வருடங்கள் தேங்கிக் கிடக்கும் தமது மன வடுக்களுடன் கலந்து கொண்டிருந்தார்கள்.


இழந்த உறவுகள், அழிவடைந்த சொத்துக்கள், புணரமைக்கப்படாத வீதிகள், பாழடைந்த கட்டிடங்கள், பாவனையின்றிக் கிடக்கும் வணக்கஸ்தலங்கள்;,

மீள கட்டி எழுப்பப்படாத பாடசாலைகள் போன்றன பேரழிவின் வலிகளை மீள மீள நினைவுறுத்தும் எச்சங்களாகவே இன்று வரை அப்பிரதேச மக்களின் வாழ்வோடு

ஒட்டியிருக்கின்றன.

ஒரு காலை, இரவின் அச்சத்தில் இருந்து மீட்டெடுக்கின்றது.

ஒரு வெற்றி, தோல்வியின் வலிகளுக்கு ஒத்தணம் கொடுக்கின்றது.

ஒரு எழுச்சி, வீழ்ச்சியின் அவமானங்களை துடைத்தழிக்கின்றது.

ஒரு மாற்றம், சோர்வின் அந்தலையை தூக்கி நிறுத்துகின்து.

ஆனால் 16 வருட வடமராட்சி கிழக்கு மக்களின் மன வடுக்களுக்கு இன்று வரை எந்தவித வடிகாலும் கிடைத்திருக்கவில்லை.

இன்னமும் எத்தனை ஆண்டுகள் இந்த மக்கள் ஒரு மாற்றத்துக்காய் காத்திருக்க வேண்டும்?


  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE