இலங்கை எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையை செற்படுத்த அதிக நிதி தேவை.
ஐக்கிய நாடுகள் சபை.

இலங்கை தொடர்பான கொண்டுவரப்பட்ட பிரேரணையை செற்படுத்த அதிக நிதி தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை செயற்படுத்த தேவையான நிதி 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இல்லை என ஐ.நாடுகள் சபையின் திட்டமிடல் மற்றும் வரவு செலவுத் திட்டப் பிரிவு இயக்குனர் ஜோஹனேஸ் ஹுஸைமான் தெரிவித்தார்.
இது தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் கோரோ ஒனோஜிமாவுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.குறித்த கடிதத்தில் தீர்மானத்தில் தொடர்புடைய விதிகள் 2021ஆம் ஆண்டிற்கான திட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அல்லது 2022ஆம் ஆண்டிற்காக முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இணைக்கப்படவில்லை என குறிபிட்டார்.
அதன்படி, வரைவுத் தீர்மானம்A / HRC / 46 / L.1க்கு, கூடுதலாக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் உள்ளிட்ட பல செலவுகளை அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.