அஜித் படத்தின் தமிழக உரிமை ரூ.60 கோடிக்கு விற்பனை.


அஜித்குமார் நடிக்கும் ‘வலிமை’ படம் தயாரிப்பில் இருக்கும்போதே எல்லா இடங்களிலும் வினியோக உரிமையும் விற்பனையாகி வருகிறது. இதன் தமிழ்நாடு உரிமை மட்டும் ரூ. 60 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.60 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ‘வலிமை’ படத்தின் தமிழ்நாடு உரிமையை ரூ.20 கோடி லாபம் வைத்து ரூ. 80 கோடிக்கு விற்க இருப்பதாக பேசப்படுகிறது.இந்த உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ஆகிய இருவரும் வாங்கியிருக்கிறார்கள்.


படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு சண்டை காட்சி தவிர, மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு அவர், ‘டப்பிங்’ பேசி முடித்து விட்டார். அவர் நடிக்க இருக்கும் ஒரே ஒரு சண்டை காட்சியை ஏதாவது ஒரு வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

4 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: