இந்தக் கணம் என்பது தான் இப்போதைக்கு உண்மை!

இறந்தவர்களுக்கு அஞ்சலி!
இருப்பவர்களுக்கு எச்சரிக்கை!
சுற்றிவர நிகழும் கொறோனா மரணங்கள்
அச்சுறுத்தியபடி இருக்கின்றன.
இது வாழ்தலுக்கான பலப் பரீட்சை.
தக்கன பிழைத்தலில்
நாமா? கிருமியா?
என்ற ஜீவ பிரயத்தனம்.
இன்னமும்
யார் யாரெல்லாம்
யார் யாரையெல்லாம் இழக்கப்போகின்றோம்?
கடவுள் பூமியை துப்பரவு செய்கின்றாரா
இல்லை
வல்லரசுகளின்
இரகசியச் சதுரங்க ஆட்டத்தில்
பூமி கனக்குறைப்பு செய்யப்படுகின்றதா
என ஆருடம் கூற முடியவில்லை.
ஆளுக்கொரு தேநீர் கோப்பையுடன்
தயாராகுங்கள்
இப்போதே சிரிக்க வேண்டியதை
சிரித்து முடிப்போம்
இந்தக் கணம் என்பது தான்
இப்போதைக்கு உண்மை!
- சாம் பிரதீபன் -
0 views